சுடச்சுட

    

    திருப்பத்தூர் அருகேபிளாஸ்டிக் நிறுவனத்தில் தீ விபத்து

    By DIN  |   Published on : 31st October 2016 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தீபாவளி நாளில் பிளாஸ்டிக் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் சேதம் அடைந்தது குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சேர்ந்தவர் கலிமுல்லா (45). இவர் திருப்பத்தூரை அடுத்த வெங்களாபுரம் பகுதியில் கழிவு பிளாஸ்டிக்குகளைச் சேகரித்து தூள் தூளாக்கி மறுசுழற்சிக்காக வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
    இந்நிலையில் சனிக்கிழமை இரவு 9 மணியளவில் இவரது கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் இயந்திரம் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
    தகவலறிந்த திருப்பத்தூர் தீயணைப்புநிலைய அதிகாரி பன்னீர்செல்வம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் சேதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
    இதுகுறித்து கலிபுல்லா அளித்த புகாரின் பேரில் திருப்பத்தூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai