Enable Javscript for better performance
துக்க வீட்டில் சுவர் இடிந்து 4 பெண்கள் பலத்த காயம்- Dinamani

சுடச்சுட

    

    வாணியம்பாடி அருகே துக்கம் விசாரிக்க வந்த இடத்தில் வீட்டு மாடிச் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பெண்கள் காயம் அடைந்தனர்.
    வாணியம்பாடியை அடுத்த குரும்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜம்மா (90) ஞாயிற்றுக்கிழமை இரவு இறந்தார்.
    இதில், துக்கம் விசாரிக்க வந்த அவரது உறவினர் பெண்கள் வீட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தல் அருகே திங்கள்கிழமை காலை அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென அந்த வீட்டின் மாடிச் சுவர் இடிந்து அதிலிருந்த செங்கல்கள் விழுந்ததில் கீழே அமர்ந்திருந்த தங்கம்மா (50), எல்லம்மாள் (70), மல்லிகா (50), ரஜினி (55) ஆகிய 4 பெண்கள் பலத்த காயமடைந்தனர்.
    இவர்களில் தங்கம்மா, எல்லம்மாள், மல்லிகா ஆகிய 3 பேரும் வாணியம்பாடி தனியார் மருத்துவமனையிலும், ரஜினி வாணியம்பாடி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai