சுடச்சுட

    

    காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியை மாணவிகள் திங்கள்கிழமை எடுத்துக் கொண்டனர்.
    சர்தார் வல்லபபாய் படேலின் 141-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை (பொறுப்பு) டி.என்.ஷோபா தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை ஜோன் பிரேமகுமாரி முன்னிலை வகித்தார். தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் உறுதிமொழி வாசித்தார்.
    ஆசிரியர்கள், மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதேபோல, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமையில் அரசு ஊழியர்கள் எடுத்துக் கொண்டனர்.
    அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் உஷா சதாசிவம் தலைமையில் மருத்துவர்கள், ஊழியர்கள் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    மேல்விஷாரம் கல்லூரியில்...
    ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் சி.அப்துல் அக்கீம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒற்றுமை தினவிழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
    நாட்டின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் முன்னாள் துணை பிரதமர் சர்தார் வல்லப பாய்பட்டேல்  பிறந்த நாள் விழா நாடு முழுவதும் ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.
    மேல்விஷாராம் சி.அப்துல் அக்கீம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ஒற்றுமை தின விழாவுக்கு  கல்லூரி முதல்வர் எஸ்.ஏ. சாஜித் தலைமை வகித்தார்.  திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்  எச்.முனவர்ஜான்  முன்னிலை வகித்தார். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு ஒற்றுமை தின உறுதி மொழியை ஏற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai