Enable Javscript for better performance
பார்சலில் வந்த மதுவைக் குடித்த இருவர் கவலைக்கிடம்- Dinamani

சுடச்சுட

    

    வேலூர் அருகே பார்சலில் வந்த மதுவைக் குடித்த இருவர் மயக்கமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    வேலூரை அடுத்த சாத்துமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (36). இவருக்கு கூரியர் மூலம் சனிக்கிழமை ஒரு பார்சல் வந்துள்ளது. அதனைப் பிரித்து பார்த்தபோது உள்ளே மதுபாட்டில் இருந்துள்ளது.
    இதையடுத்து சதீஷ்குமார், அவரது நண்பர் வசந்தகுமார் (36) ஆகிய இருவரும் அந்த மதுவை குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் இருவரும் மயக்கமடைந்தனர். இதனை அறிந்த அவரது உறவினர்கள் இருவரையும் உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    இதுகுறித்து வேலூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் ஸ்ரீ சாய் டிஸ்டிலரி, செங்கல்பட்டு என்ற முகவரியிலிருந்து அந்த பார்சல் மது வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai