சுடச்சுட

    

    ஆம்பூரில் அரசுப் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 9 பேர் திங்கள்கிழமை காயமடைந்தனர்.
    ஆம்பூர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு அருகே குடியாத்தம் நோக்கிச் சென்ற அரசு நகரப் பேருந்து நின்று கொண்டிருந்தது. அதில் பயணிகள் ஏறிக் கொண்டிருந்தனர்.
    அப்போது திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் இருந்து திருப்பதி நோக்கி வந்த கார் இந்தப் பேருந்து மீது மோதியது. இவ்விபத்தில் கோதுமணி (40), பரமசிவம்(28), அரசு (40), மணியம்மாள் (45), சின்னதுரை (50), தங்கவேல் (60),   சுரேகா  (50), ராஜம்மாள் (50) உள்ளிட்ட 9 பேர் காயமடைந்தனர்.  
     இவர்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஆம்பூர் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai