சுடச்சுட

  

  வாலாஜா ஒன்றியம், வன்னிவேடு ஊராட்சி முன்னாள் தலைவர் சக்திவேல் குமார். இவர் வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமனின் பரிந்துரையின் பேரில், மாநில ஆதிதிராவிடர் நலக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
   இவர் வன்னிவேடு ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு குடிநீர், சாலை, மயானப் பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துள்ளார்.
   இதேபோல் வன்னிவேடு ஊராட்சிக்கு உள்பட்ட தேவதானம் கிராமத்தில் குழந்தைகள் காப்பகம், மகளிர் சுய உதவி குழுக்கள், நியாய விலைக் கடை ஆகியவற்றை அமைத்துத் தந்துள்ளார். இவரது சமூக சேவைக்காக மேற்படி நலக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai