சுடச்சுட

    

    மாவட்ட கிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

    By DIN  |   Published on : 31st October 2016 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியாத்தம் கமல் கிரிக்கெட் கிளப் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
    கமல் கிரிக்கெட் கிளப் சார்பில் 3-ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகள் நகராட்சி மேல்நிலைப் பள்ளி விளையாட்டரங்கில் கடந்த செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி தொடங்கி, நடைபெற்று வந்தன.
    இதில் மாவட்டத்தின் சிறந்த 28 அணிகள் பங்கேற்றன. இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை பரிசுஅளிப்பு விழா நடைபெற்றது.
    போட்டியில் முதலிடம் பெற்ற ஆம்பூர் அஜித் அணிக்கு ரூ.30 ஆயிரம் ரொக்கம், கேடயம், 2-ஆம் இடம் பெற்ற குடியாத்தம் கிரிக்கெட் அகாதமி அணிக்கு ரூ. 15 ஆயிரம் ரொக்கம், கேடயம், சிறந்த வீரர்களுக்கு பரிசுகள் ஆகியவற்றை கருப்புலீஸ்வரர் கோயில் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் கே.வி. கோபாலகிருஷ்ணன், எஸ்.சதீஷ்குமார், இ. மகிழரசன் ஆகியோர் வழங்கினர்.
    போட்டிக்கான ஏற்பாடுகளை கிளப் தலைவர் கமல்ராஜ், மேலாளர் சதாசிவம், செயலர் திலக், துணைத் தலைவர்கள் தினேஷ், எம். தீனதயாளன், எம். முரளி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai