சுடச்சுட

    

    மின்னல் கிராம ஏரியில் மா மரங்கள் அழிப்பு: ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீது புகார்

    By DIN  |   Published on : 31st October 2016 11:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மின்னல் ஊராட்சி ஏரியில் வைக்கப்பட்டிருந்த மாமரங்களை அழித்து விட்டதாக சென்னையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீது போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
    அரக்கோணம் அருகே உள்ளது மின்னல் ஊராட்சி. இங்குள்ள ஏரியில் அரசு பொதுப் பணித் துறையின் அனுமதி பெற்று மின்னல் ஊராட்சி நிர்வாகம் மா மரங்களை வளர்த்து வந்தது. இந்த மரங்களை சென்னை, செளகார்பேட்டையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் அசோக்குமார் அழித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
     அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மின்னல் ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஆதிலட்சுமி பெரியசாமி அரக்கோணம் கிராமியக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
    கடந்த 24-ஆம் தேதி சம்பவம் நடைபெற்றபோது அவர் பொறுப்பில் இருந்ததாகவும், அதனால் புகாரில் தலைவர் என குறிப்பிட்டுள்ளதாகவும் ஆதிலட்சுமி பெரியசாமி தெரிவித்தார். இப்புகார் குறித்து அரக்கோணம் கிராமியக் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai