சுடச்சுட

    

    ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று தொடக்கம்

    By DIN  |   Published on : 31st October 2016 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா திங்கள்கிழமை தொடங்குகிறது.
    விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. காலையில் வெள்ளிக்கவச அலங்காரமும், மாலையில் ஓம்கார அலங்காரமும் செய்யப்படுகின்றன.
    தொடர்ந்து நாள்தோறும் புஷ்ப அலங்காரம், பட்டுசாத்துதல், நவரத்தினம், ராஜ அலங்காரம், மயில் வாகன அலங்காரம், விபூதிகாப்பு, சந்தனக்காப்பு, முத்தங்கிசேவை, 5-ஆம் தேதி சனிக்கிழமை காலை ராஜ அலங்காரமும், மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரமும் நடைபெறுகிறது.
    6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை தங்கக் கவச அலங்காரமும் மாலை சுவாமி திருக்கல்யாண உற்சவமும், இரவு திருவீதி உலாவும் நடைபெற உள்ளன. மேலும் சஷ்டி விழா நாள்களில் மாலையில் கந்தபுராணச் சொற்பொழிவு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பாலமுருகன் கோயில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள், கோயில் செயல் அலுவலர் (பொறுப்பு) ராதாமணி ஆகியோர் செய்துள்ளனர்.
    குடியாத்தத்தில்...
    குடியாத்தம், அக். 30: குடியாத்தம், புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கு திங்கள்கிழமை தொடங்கி நவம்பர் மாதம் 6 ஆம் தேதி வரை கந்த சஷ்டி உற்சவம் நடைபெறுகிறது. 5-ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
    விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சோ.செந்தில்
    குமார், தக்கார் மா.மாதவன்
    உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai