சுடச்சுட

    

    ராணிப்பேட்டை: பள்ளிகளுக்கு இடையே 3-ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகள்

    By DIN  |   Published on : 31st October 2016 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராணிப்பேட்டை ஜி.கே. உலகப் பள்ளியில், பள்ளிகளுக்கு இடையேயான 3-ஆம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் 27, 28ஆம் ஆகிய தேதிகளில் நடைபெற்றன.
    இப்போட்டிகளில் மகரிஷி இன்டர்நேஷ்னல், அப்பல்லோ வித்யாஷ்ரம், ஐடா ஸ்கடர், வேலம்மாள், சிருஷ்டி வித்யாஷ்ரம் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு விளையாடினர்.
    இதில் ஜி.கே. உலகப் பள்ளி மாணவர்கள் பெரும்பாலான போட்டிகளில் பங்கேற்று அதிகப் புள்ளிகள் பெற்றனர். மேலும் கால்பந்து போட்டிகளில் சிருஷ்டி வித்யாஷ்ரம், ஜி.கே உலகப் பள்ளியும், டென்னிஸ் போட்டிகளில் வேலம்மாள், செவன்த் டே அட்வென்டிஸ் பள்ளியும் கோப்பையை கைப்பற்றின. இதையடுத்து பரிசளிப்பு விழா 28ஆம் தேதி மாலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஜி.கே. உலகப் பள்ளி விளையாட்டுக் குழுவினர் வரவேற்றனர்.
    பள்ளி இயக்குனர்கள் வினோத் காந்தி, சந்தோஷ் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஜி.கே. கல்வி அறக்கட்டளையின் தலைவரும், ராணிப்பேட்டை எம்எல்ஏவுமான ஆர்.காந்தி கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுக் கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.
    நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர்கள் பிரசிதா, தாமஸ் மேத்யூ மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி மக்கள் தொடர்பு அலுவலர் நேரு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai