Enable Javscript for better performance
விஐடியில் இந்தியன் வங்கி இ-பேங்கிங் மையம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    வேலூர் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் இந்தியன் வங்கியின் இ-பேங்கிங் மையம் அண்மையில் தொடங்கப்பட்டது.
    விஐடியில் படிக்கும் மாணவர்களின் வங்கி பரிவர்த்தனைக்காக இந்தியன் வங்கி 7 ஏடிஎம் மையங்களை அமைத்துள்ளது. தற்போது அனைத்து வசதிகளுடன் கூடிய இ-பேங்கிங் மையத்தை அமைத்துள்ளது. இந்த மையத்தின் திறப்பு விழாவுக்கு விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்து பேசியதாவது:
    வங்கியில் கணக்கு வைத்திருப்பது நல்ல பழக்கமாகும். இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்கள் வங்கி கணக்கு மூலம் பண பரிவர்த்தனை செய்து வருகின்றனர். வங்கிகளின் செயல்பாடுகளை வைத்து அந்த நாட்டின் வளர்ச்சியை காண முடியும். நம் நாட்டில் சிலர் வரி ஏய்ப்பு செய்து வருகின்றனர். அனைவரும் முறையாக வரி செலுத்த வேண்டும். அதற்கான முயற்சியில் இளைஞர்கள் ஈடுபட வேண்டுமென்றார்.
    இ-பேங்கிங் மையத்தை வங்கியில் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலருமான மகேஷ்குமார் ஜெயின் திறந்து வைத்து, இ-பேங்கிங் சம்பந்தமான செயலிகளை உருவாக்கிய விஐடி மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி அவர் பேசியதாவது:
    நாட்டின் நிலையான, வலிமையான வங்கியாக இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. அதற்காக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இந்தியன் வங்கிக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளார். வாடிக்கையாளர்களின் நலனுக்காக பல்வேறு வசதிகளை வங்கி ஏற்படுத்தி வருகிறது. இனிமேல் ஏடிஎம் அட்டை மூலமே அனைத்து வங்கி பரிவர்த்தனைகளையும் செய்யலாம். இந்தியன் வங்கியின் விஐடி கிளை 60 ஆயிரம் வாடிக்கையாளர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார்.
    விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், இணை துணை வேந்தர் எஸ்.நாராயணன், வங்கியின் துணைப் பொது மேலாளர் பி.நாகார்ஜூனா, உதவிப் பொது மேலாளர் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai