சுடச்சுட

    

    சீர்திருத்த நிர்வாகம் மற்றும் மேலாண்மை அபிவிருத்தி ஆராய்ச்சி பணிகளுக்காக விஐடி பல்கலைக் கழகமும், ஆப்கா நிறுவனமும் அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
    தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சிறைத்துறை அதிகாரிகளுக்கு சீர்திருத்த நிர்வாகம் குறித்த பயிற்சியை வேலூரில் உள்ள ஆப்கா நிறுவனம் அளித்து வருகிறது.
    சிறை நிர்வாகம், மேலாண்மைத் திறன் வளர்ப்புப் பணி, மேலாண்மை மற்றும் சிறை நிர்வாகம் இடையே தொடர்புடைய சீர்திருத்த நிர்வாக பயிற்சியை மேம்படுத்த ஆப்கா நிறுவன அதிகாரிகளுக்கு விஐடி பல்கலைக்கழகத்தில் பயிற்சி அளிக்கவும், ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட விஐடியும், ஆப்கா நிறுவனமும் முடிவு செய்துள்ளன.
    இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன், ஆப்கா இயக்குநர் எம்.ஆர்.அகமது ஆகியோர் கையெழுத்திட்டனர். நிகழ்வில், விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், துணை வேந்தர் ஆனந் ஏ.சாமுவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai