சுடச்சுட

    

    வேலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர குறைதீர் முகாமில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட 247 மனுக்கள் மீது துறைரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது.
    மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்துக்கு ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமை வகித்தார். பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, கடனுதவி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட 247 மனுக்கள் மீது துறைரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டன.
    தொடர்ந்து, 2016-17ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு படித்து வரும் 8 மாணவ, மாணவிகளுக்கு தந்தை பெரியார் நினைவு விருதுடன், தலா ரூ.10 ஆயிரத்துக்கான காசோலை, மூன்று பயனாளிகளுக்கு இரண்டு சக்கர நாற்காலி, ஒருவருக்கு காதொலி
    கருவி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வழங்கினார்.
    மாவட்ட வருவாய் அலுவலர் க.மணிவண்ணன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெய
    பிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் எம்.பரமேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai