சுடச்சுட

    

    32-ஆவது ஆண்டு நினைவு நாள்: இந்திரா காந்தி சிலைக்கு காங்கிரஸார் மாலை அணிவிப்பு

    By DIN  |   Published on : 31st October 2016 11:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 32-ஆவது நினைவு நாளையொட்டி அவரது உருவச்சிலை, படத்துக்கு காங்கிரஸார் திங்கள்கிழமை மாலை அணிவித்தனர்.
    ராணிப்பேட்டையில்...
    ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரா காந்தி நினைவு தினம் முத்துக்கடை காந்தி சிலை அருகில் அனுஷ்டிக்கப்பட்டது
    நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் கட்சித் தலைவர் வழக்குரைஞர் எஸ்.அண்ணாதுரை தலைமை வகித்தார். நிர்வாகிகள் கே.வெங்கடேசன், வி.நாகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் பி.மோகன் வரவேற்றார்.
    நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் எஸ்.எம்.இப்ராஹிம் பங்கேற்று இந்திரா காந்தியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி  மவுன அஞ்சலி செலுத்தினர்.
    இதில் நகர நிர்வாகிகள் மோகன சுப்பிர
    மணியம், புலவர் ரங்கநாதன்,உத்தமன், தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    அரக்கோணத்தில்...
    அரக்கோணம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் உள்ள இந்திரா காந்தி உருவச்சிலை அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் எஸ்.சாந்தகுமார் தலைமை வகித்து இந்திரா காந்தி உருவச்சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் நகர துணைத் தலைவர்கள் ஏழுமலை, பி.சி.சுரேஷ்பாபு, நகரச் செயலர் கட்டளைசீனிவாசன் மற்றும் ஜி.ஏ.வகாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    வாணியம்பாடியில்...
    வாணியம்பாடியில் பேருந்து நிலையம் அருகே உள்ள இந்திரா காந்தியின் உருவச் சிலைக்கு தமிழக காங்கிரஸ் சிறுபான்மைத்துறை மாநிலத் தலைவர் ஜெ.அஸ்லம்பாஷா மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
    இதில் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பரீத் அகமது,  மாவட்ட துணைத் தலைவர் சாந்தகுமார், மாவட்ட அமைப்பாளர் கவியரசன், சட்டப்பேரவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பைசல்அமீன் மற்றும் முஹம்மத்பாஷா, செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி சிலைக்கு மாவட்டத் தலைவர் தேன்மொழி சிவக்குமார் மாலை அணிவித்தார். இதில் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்கள் கோவிந்தராஜி, எம்.சலாவுதீன், விநாயகமூர்த்தி, மகிளா காங்கிரஸ் நகரத் தலைவர் முத்துலட்சுமி, கென்னடி, குப்பன், பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai