சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் வியாழக்கிழமை கருட சேவை உற்சவம் நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளக்கும் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தை யொட்டி, கருட சேவை நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு கருட சேவை உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தங்க கருட வாகனத்தில் உற்சவர் பக்தோசித பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.