பட்டு தொழில் ஊக்குவிப்பு முகாம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பட்டு தொழிலுக்கான ஊக்குவிப்பு முகாம் மற்றும் கண்காட்சி வாணியம்பாடியை அடுத்த நாராயணபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on
Updated on
1 min read

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பட்டு தொழிலுக்கான ஊக்குவிப்பு முகாம் மற்றும் கண்காட்சி வாணியம்பாடியை அடுத்த நாராயணபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 முகாமில் வாணியம்பாடி பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். பட்டு வாரியத் தலைவர் கே.எம்.ஹனுமந்தராயப்பா பங்கேற்று முகாம் மற்றும் கண்காட்சியை தொடங்கி வைத்துப் பேசினார். தொடர்ந்து இரண்டு பட்டு விவசாயிகளுக்கு தலா ரூ. 52,500 மதிப்பிலான களையெடுக்கும் இயந்திரம் மற்றும் 12 உபகரணங்களை முழு மானியத்தில் வழங்கினார். தொடர்ந்து மத்திய, மாநில அரசு பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும் நடவு மானியம், சொட்டு நீர்ப் பாசன மானியம், பயிற்சி மானியம், காப்பீட்டுக்கான மானியம், விவசாயிகள் பயிற்சி மானியம் குறித்து விரிவாகக் கூறப்பட்டது. முகாமில், பட்டு வளர்ச்சித் துறை ஆராய்ச்சியாளர்கள் ராஜ்குமார், குமரேசன், விஜயகுமார், இளநிலை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட விவசாயிகள் மற்றும் இதர பட்டு வளர்ப்பு முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com