வேலூர் டான் பாஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (மே 22) தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் சார்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
வேலூர் ஆபீசர்ஸ் லைனில் உள்ள டான் பாஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் வருகிற திங்கள்கிழமை (மே 22) நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல், ஒன்றியத்துக்குள் பொது மாறுதல், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு, மாவட்டத்துக்குள் பொது மாறுதல் கலந்தாய்வு ஆகியவை நடைபெறுகிறது. மே 23-ஆம் தேதி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு, மே 24-இல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவலும் நடைபெறுகிறது. மே 25-ஆம் தேதி இடைநிலை ஆசிரியர் ஒன்றியத்துக்குள்ளும், மாவட்டத்துக்குள்ளும் பொதுமாறுதல் நடைபெறுகிறது.
அதேபோல, பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு பொது மாறுதல் கலந்தாய்வு மே 26-ஆம் தேதியும், இடைநிலை ஆசிரியருக்கு மாவட்டம் விட்டு மாவட்ட பொது மாறுதல் கலந்தாய்வு மே 29, 30 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.