காட்பாடியில் அதிகக் கட்டணம் வசூலித்ததாக 10 ஆட்டோக்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
காட்பாடி ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளிடம் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பி.சுரேஷ், மோட்டார் வாகன ஆய்வாளர் எஸ்.வெங்கட்ராகவன் ஆகியோர் தலைமையில் வியாழக்கிழமை சோதனையிடப்பட்டது.
அப்போது அதிகக் கட்டணம் வசூலித்தது, பர்மிட் இல்லாமல் இயக்கியது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது போன்ற காரணங்களுக்காக 10 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.