வாணியம்பாடியில் 30 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி வந்ததாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காரில் கஞ்சா கடத்தி வருவதாக வாணியம்பாடி கிராமிய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், புதன்கிழமை இரவு செட்டியப்பனூர் இணைப்பு சாலையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருப்பத்தூர் நோக்கி சென்ற காரை போலீஸார் நிறுத்தி விசாரித்த போது, ஓட்டுநர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தாராம். இதையடுத்து போலீஸார் காரை சோதனையிட்டதில் 30 கிலோ கஞ்சா பாக்கெட்டுகளில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவையும், காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, காரை ஓட்டி வந்த திருப்பத்தூரை அடுத்த பொம்மிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜவேலுவிடம் (35) விசாரித்ததில், அவர், ஆந்திரத்தில் இருந்து கஞ்சாவை காரில் கடத்தி வந்து பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்வது தெரியவந்தது. இந்த கடத்தல் சம்பவத்தில் ராஜவேலுவின் தந்தை மாதுவுக்கும் (55) தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து பொம்மிக்குப்பத்தில் வீட்டில் இருந்த மாதுவை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜவேலு மற்றும் அவரது தந்தை மாது ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.