காவல் துறையின் வாகனத் தணிக்கைக்காக 12 இரும்பு தகடுகளை அரக்கோணம் ரோட்டரி சங்கம் வழங்கியது.
அரக்கோணம் நகர மற்றும் கிராமிய காவல் நிலைய பகுதிகளில் வாகனத் தணிக்கையில் ஈடுபடுவதற்காக தங்களுக்கு இரும்பு தடுப்புகள் தேவைப்படுவதாகவும், இதை செய்து தருமாறும் இரு காவல் நிலையத்தினரும் அரக்கோணம் ரோட்டரி சங்கத்தினரிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அரக்கோணம் ரோட்டரி சங்கத்தின் அடுத்தாண்டு தலைவரான பி.இளங்கோ, அதனை தனது சொந்த செலவில் செய்து தருவதாகத் தெரிவித்தார். இதையடுத்து அந்த 12 தடுப்புகளையும் காவல் துறையினரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அரக்கோணம் ரோட்டரி சங்கத் தலைவர் கே.பி.கே.பிரபாகரன் தலைமை வகித்தார். கிராமிய காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் நிர்வாகிகள் அனைவரும் இணைந்து 12 இரும்பு தடுப்புகளை வழங்கினர்.
இதில் நிர்வாகிகள் சந்துரு, மணி, வெங்கடரமணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.