ஜோலார்பேட்டை சுற்றுப் பகுதிகளில் புதன்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது.
ஜோலார்பேட்டை சுற்றுப் பகுதிகளில் கடும் வெயில் நிலவி வந்த நிலையில், புதன்கிழமை மாலை திடீரென சூறாவளி காற்று வீசியது. இதனால், ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி வழியாக ஏலகிரி மலைக்கு செல்லும் சாலையில் கோடை விழாவையொட்டி தாற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த அலங்கார நுழைவாயில் சரிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து ஜோலார்பேட்டை போலீஸார் அங்கு சென்று அலங்கார நுழைவாயிலை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.
மரம் விழுந்தது... திருப்பத்தூர் சுற்றுப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், திருப்பத்தூர்-தருமபுரி சாலையில் உள்ள குனிச்சி பகுதியில் சாலையோரம் இருந்த மரம், மின் கம்பம் ஆகியவை சாய்ந்தன.
இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.