எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அமைச்சர் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டது ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
வேலூர் கோட்டை மைதானத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இதை முன்னிட்டு, மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, அவரது ஆதரவாளர்கள் சார்பில் ரங்காபுரத்தில் வைக்கப்பட்டிந்த ஏராளமான பேனர்களில் அமைச்சர் முகம் மட்டும் கிழிக்கப்பட்டிருந்தது. அதேவேளையில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நீலோபர் கபில் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் எதுவும் சேதப்படுத்தப்படவில்லை.
அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பாலசுப்பிரமணியன், ஜெயந்தி பத்மநாபன் ஆகியோரிடம் கட்சியினர் யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது என அமைச்சர் கே.சி.வீரமணி கட்சியினருக்கு அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.
அதேபோல, கிழக்கு மாவட்டச் செயலாளரும், சோளிங்கர் எம்எல்ஏவுமான என்.ஜி.பார்த்திபன் அதிமுக அம்மா அணியில் இருப்பதால் மாவட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது.
இந்நிலையில், அவரது படம் இருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டிருப்பது அமைச்சரின் ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுதொடர்பாக போலீஸில் புகார் எதுவும் செய்யப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.