நூலகத்தில் ஆசிரியர் தின விழா

குடியாத்தம் முழுநேரக் கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் ஆசிரியர் தின விழா செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது.
Published on
Updated on
1 min read

குடியாத்தம் முழுநேரக் கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் ஆசிரியர் தின விழா செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத் தலைவர் முல்லைவாசன் தலைமை வகித்தார். நூலகர் து.ரவி வரவேற்றார். புலவர் வே.பதுமனார், வழக்குரைஞர்கள் எஸ்.சம்பத்குமார், கே.எம்.பூபதி, திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் கோ. புருஷோத்தமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நூலவர் ஆ.ச.மதன் நன்றி கூறினார்.

சிக் ஷா கேந்திராவில்...
பள்ளிகொண்டா சிக் ஷா கேந்திரா மெட்ரிக். பள்ளியில் ஆசிரியர் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
 நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைவர் பி.என்.எஸ்.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். முதல்வர் ஜே.சுஹாசினி வரவேற்றார். ஆசிரியர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளித் தாளாளர் டி.குகன், ஐசிஎஸ்ஈ பள்ளி முதல்வர் எல்.பிராங்கிளின் தேசாய், கல்வி ஆலோசகர் ஜி.திருநாவுக்கரசு, மெட்ரிக். பள்ளி முதல்வர் எம்.அலங்காரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வாலாஜாபேட்டையில்...
வாலாஜாபேட்டையை அடுத்த சுமைதாங்கியில் உள்ள நாக் குழுமப் பள்ளிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் எஸ்.சி. பிள்ளை  தலைமை  வகுத்து, டாக்டர் ராதாகிருஷ்ணன் படத்துக்கு மாலை  அணிவித்தார். சிபிஎஸ்இ பள்ளியின் முதல்வர் அகிலாண்டீவரி வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து மெட்ரிக். மற்றும் சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தின  உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். பின்னர், ஆசிரியர் தின விழாவின் முக்கியத்துவம் குறித்து பள்ளியின் முதன்மைச் செயலாளர் பார்வதிநாதன் மற்றும் ஆசிரியர்கள் உரையாற்றினர்.
மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பள்ளியின்  நிர்வாக அதிகாரி சி.நாகராஜன், மேல்நிலைப் பள்ளி ஒருங்கிணைப்பாளர் சுந்தரபாண்டியன், நிர்வாக அலுவலர் ஜி.நாகராஜன், மெட்ரிக். பள்ளி முதல்வர் விஜயலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.  

ஆற்காட்டில்...
ஆற்காடு ஒன்றியம், கே. வேளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்  ஆசிரியர் தினவிழா புதன்கிழமை  நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு  பள்ளியின் கல்விக் குழு தலைவர் என்.நந்தகுமார் தலைமை வகித்தார். பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.சீனிவாசன், ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் ஆர்.தனஞ்செழியன், கட்டடக் குழுத் தலைவர் எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் த.வடிவேலு வரவேற்றார்.
ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பி.முருகேசன், தொழிலதிபர்கள்  செய்யாறு கே.எஸ். செல்வராஜு, இரா.நடேசன், ராணிப்பேட்டை இ.அம்பலவாணன், கே.நாகராஜன் ஆகியோர் ஆசிரியர்களை பாராட்டிப் பேசினர்.  திருவலம் கே.மோகன்கல்வி அறக்கட்டளை  நிறுவனர் கே.எம்.பாலு,  பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிப் பேசினார்.   பட்டதாரி ஆசிரியர் கே.கே.மணி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com