மழை பாதிப்பு:  அவசரகால உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்

திருப்பத்தூர் உள்கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மழையால் பாதிப்பு ஏற்பட்டால் அவசரகால உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என சார் ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Published on
Updated on
1 min read

திருப்பத்தூர் உள்கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மழையால் பாதிப்பு ஏற்பட்டால் அவசரகால உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என சார் ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக பாலாறு, ஜலகாம்பாறை மற்றும் கானாறுகள் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், சில இடங்களில் நீர்வீழ்ச்சிகள் உருவாகி, வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, அப்பகுதிகளில் உள்ள மக்கள் நீருக்குள் இறங்குதல், குளித்தல், துணி துவைத்தல், கால்நடைகள் மற்றும் வாகனங்களை கழுவுதல், புகைப்படம் எடுத்தல் போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். மேலும், மின் கம்பங்கள், கம்பிகளில் ஏதேனும் சேதம் ஏற்பட்டிருந்தாலும், நீர்நிலைகளின் ஓரத்தில் வசிக்கும் மக்கள் மழையால் பாதிக்கப்பட்டாலும் அதுதொடர்பாக உடனடியாக தகவல் தெரிவிக்க 1077 என்ற மாவட்ட உதவி எண் (அ) 1070 என்ற மாநில எண்ணை அழைக்கலாம்.
இதுதவிர திருப்பத்தூர்: 04179-220091, வாணியம்பாடி: 04174-232184, ஆம்பூர்: 04174-244255, நாட்டறம்பள்ளி: 04179-242499 ஆகிய வட்டார எண்களுக்கும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com