திருப்பத்தூரில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸார் அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாத இருவருக்கு அபராதம் விதித்தனர். இதுதொடர்பாக 114 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இதையொட்டி, திருப்பத்தூர் நகரப் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாத 2 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் அதிவேகமாக வாகனம் ஓட்டியது, மதுஅருந்தி வாகனம் ஓட்டியது, செல்லிடப்பேசியில் பேசியபடி ஓட்டியது, அதிகபாரம் ஏற்றியது, தலைக்கவசம் அணியாதது, மூன்று நபர்கள் அமர்ந்து சென்றது, பொது இடங்களில் வாகனம் நிறுத்தியது என 114 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
மேலும், புதிய ஓட்டுநர் உரிமம் பெற 142 பேர் விண்ணப்பித்திருப்பதாக திருப்பத்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் குணசேகரன் தெரிவித்தார்.
வாலாஜாபேட்டையில்...
வாலாஜாபேட்டை அருகே அணைகட்டு சாலை சந்திப்பில் உதவி ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான போலீஸார் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த நபர்களிடம் அசல் ஓட்டுநர் உரிமம் உள்ளதா? என விசாரணை நடத்தினர். இதில், 5-க்கும் மேற்பட்டவர்களிடம் அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாததால் போலீஸார் அவர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.