ஆம்பூர் அருகே உள்ள விண்ணமங்கலம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கன மழையின்போது, வீட்டின் கூரை சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் பாதிக்கப்படவில்லை.
விண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரேணுகா (40). இவர் தன்னுடைய உறவினர்களுடன் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.
அன்று, விடிய விடிய கனமழை பெய்தது. அப்போது, திடீரென கூரை சரியும் சப்தம் கேட்டது. இதனால், தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து, வீட்டை விட்டு வெளியே வந்தனர். அப்போது, கூரை முழுவதுமாக சரிந்து விழுந்தது. இதில், ரேணுகா உள்ளிட்ட 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.