திருப்பத்தூர் அருகே ஊராட்சி செயலாளர் இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் ஒன்றியம், திம்மனாமத்தூர் ஊராட்சி செயலராக சக்திவேல் கடந்த 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மேல்அச்சமங்கலம் ஊராட்சி செயலராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து சக்திவேலை மீண்டும் திம்மனாமத்தூருக்கே இடமாற்றம் செய்யக் கோரி அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.