"ஜீவன் உத்கர்ஷ் பாலிசி வளர்ச்சியுடன் கூடிய பாதுகாப்பானது'

ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜீவன் உத்கர்ஷ் வளர்ச்சியுடன் கூடிய பாதுகாப்பான பாலிசி என வேலூர் கோட்ட முதுநிலை மேலாளர் என்.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
Updated on
1 min read

ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜீவன் உத்கர்ஷ் வளர்ச்சியுடன் கூடிய பாதுகாப்பான பாலிசி என வேலூர் கோட்ட முதுநிலை மேலாளர் என்.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் 61-வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரேயொரு முறை மட்டும் பிரீமியம் கட்டக்கூடிய ஜீவன் உத்கர்ஷ் எனும் வளர்ச்சியுடன் கூடிய பாதுகாப்பான பாலிசி அறிமுகப்பட்டிருக்கிறது. விபத்து காப்பீடு மற்றும் உடல் செயல்திறன் இழப்புப் பலன் கூடுதலாக கொண்டிருக்கும் இந்தப் பாலிசியானது, 9 மாதங்கள் மட்டுமே நடைமுறையில் இருக்கும். 6 முதல் 47 வயது வரையுள்ளவர்கள் இந்த பாலிசியில் சேர முடியும். முதிர்வுக் காலம் 12 ஆண்டுகளாகும். இந்த பாலிசியின் குறைந்தபட்ச முதிர்வு காப்புத் தொகை ரூ. 75,000 ஆகும். அதிகபட்ச உச்சவரம்பு இல்லை. பாலிசி பெறுவோருக்கு வருமானவரிச் சலுகை உண்டு என்றார்.
 பேட்டியின் போது வணிக மேலாளர் பி.மூர்த்தி, விற்பனை மேலாளர் எஸ்.கோவிந்தராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆயுள் காப்பீட்டுக் கழகம் கையெழுத்து இயக்கம்: ஆயுள் காப்பீட்டு நிறுவன பாலிசிகள் மீது கொண்டு வரப்பட்ட சரக்கு, சேவை வரியை திரும்பப் பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டிருப்பதாக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் வேலூர் கோட்ட பொதுச் செயலாளர் எஸ்.ராமன் செய்தியாளர்களிடம் கூறியது:
 மக்களின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்யும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களுக்கு 18 சதவீத சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்பட்டிருக்கிறது. பாலிசிதாரர்களை சிரமத்துக்குள்ளாக்கும் ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதிலும் கடந்த ஆகஸ்டு மாதம் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டுள்ளது. வேலூர் கோட்டத்தில் 1,27,683 பேரிடம் கையெழுத்து பெறப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்கப்படுவதோடு, இதுதொடர்பாக தமிழக, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்களிடம் மனு அளிக்கப்பட இருக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com