Enable Javscript for better performance
அரசு மருத்துவமனைக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள்- Dinamani

சுடச்சுட

    

    அரசு மருத்துவமனைக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள்

    By DIN  |   Published on : 21st April 2017 12:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிப்காட்டில் உள்ள ஸ்டால் இந்தியா நிறுவனம் சார்பில் சமுதாய பொறுப்பு திட்டத்தின் கீழ் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகள் வழங்கும் விழா மருத்துவமனை வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு, மருத்துவமனைத் தலைமை மருத்துவர் யாஸ்மின் தலைமை வகித்தார். மருத்துவர் முகமது அப்பரேஷ் வரவேற்றார். ஸ்டால் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டெரினியர் துன்ஜே மருத்துவ உபகரணங்களை வழங்கினார். அதை வேலூர் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர்
    கலிவரதன் பெற்று கொண்டார்.
    நிகழ்ச்சியில், ராணிக்டெக் நிர்வாக இயக்குநர் ஜபருல்லா, குட்லெதர் தொழிற்சாலை உரிமையாளர் மணிமாறன், தோல் தொழிற்சாலைகளின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பாஸ்கர், முனிகண்ணன், விஜயன், ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai