Enable Javscript for better performance
அரசுப் பள்ளியில் கல்வி முன்னேற்றக் கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    அரக்கோணத்தை அடுத்த அம்மனூரில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் புத்தா பாபாசாகேப் அம்பேத்கர் அறக்கட்டளை சார்பில் கல்வி முன்னேற்றப் புத்தாக்க கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    கருத்தரங்கிற்கு பள்ளித் தலைமை ஆசிரியை வனிதா ஜெயகுமாரி தலைமை வகித்தார்.
    இதில், திருத்தணி அரசினர் கலைக் கல்லூரியின் முதல்வர் கலைநேசன், அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் நைனா மாசிலாமணி, அறங்காவலர்கள் துரைமோகன் குமார், ஜான்அன்பழகன், ப.எஸ்வந்தராவ், ஆர்.ராஜசேகர், எஸ்.தன்ராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் க.கெளதமன், ரயில் பயணிகள் சங்கப் பொதுச் செயலாளர் ஜே.கே.ரகுநாதன், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக ஓய்வு பெற்ற அலுவலர் சத்தியநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai