Enable Javscript for better performance
ஆம்பூர் நகராட்சிப் பகுதியில் ஒட்டுமொத்த துப்புரவுப் பணி- Dinamani

சுடச்சுட

    

    ஆம்பூர் நகராட்சிப் பகுதியில் ஒட்டுமொத்த துப்புரவுப் பணி

    By DIN  |   Published on : 22nd October 2017 11:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆம்பூரில் நடைபெற்ற ஒட்டுமொத்த துப்புரவுப் பணியை துணை ஆட்சியர் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    ஆம்பூர் நகராட்சி சார்பில் உமர்சாலை,  கிராமியக் காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டுமொத்த துப்புரவுப் பணி நடைபெற்றது. காவல் நிலைய வழக்குகளின் போது பறிமுதல் செய்யப்பட்ட, விபத்தில் சிக்கிய நான்கு மற்றும் இரு சக்கர வாகனங்கள் காவல் நிலையத்தின் அருகே சுகாதாரச் சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்த இடத்தில் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது.
    இப்பணியை துணை ஆட்சியர் (நிலம்) வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  
    வட்டாட்சியர் மீராபென் காந்தி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) எல். குமார், துப்புரவு அலுவலர் நெடுமாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    ஜோலார்பேட்டையில்...
    திருப்பத்தூர், அக். 22: ஜோலார்பேட்டை ஒன்றியம், கட்டேரி ஊராட்சியில் உள்ள பக்கிரிதக்கா, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு விழிப்புணர்வு தூய்மை பணி மற்றும் மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றன.
    முகாமிற்கு உதவி செயற்பொறியாளர் மாருதி தலைமை வகித்தார். ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளவரசன், அன்பரசன், மண்டலத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வீடுகள், சாலைகள், கால்வாய்கள் போன்ற பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர், கழிவுநீரை துப்புரவுப் பணியாளர்கள் அகற்றி, புகை மருந்து அடித்தனர்.
    சுகாதாரத் துறை சார்பில் மருத்துவர் சிவரஞ்சனி, சுகாதார ஆய்வாளர்கள் கோபி, முருகேசன் ஆகியோர் பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனையும், நிலவேம்புக் குடிநீரும் வழங்கினர். தொடர்ந்து, டெங்கு குறித்து விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
    சுகாதாரப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்காத நபர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன்படி, 6 மாத சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் சின்னதம்பி, தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    ஏலகிரியில்... ஏலகிரி ஊராட்சிக்கு உள்பட்ட காளான் வட்டம், நேதாஜி நகர், அரியான வட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை துப்புரவுப் பணிகள் நடைபெற்றன. இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளவரசன், அன்பரசன் சுகாதார துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai