Enable Javscript for better performance
ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர்  ஊருக்குள் புகுந்தது- Dinamani

சுடச்சுட

    

    ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர்  ஊருக்குள் புகுந்தது

    By DIN  |   Published on : 22nd October 2017 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவேரிபாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
    மாவட்டத்திலேயே மிகவும் பெரிய ஏரி காவேரிபாக்கம் ஏரியாகும். தற்போது இதன் நீர்மட்டம் 28.5 அடியாக உயர்ந்துள்ளது. ஏரி நிரம்பும் தருவாயில் உள்ளதால் கரைகள் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த 17-ஆம் தேதி கடைவாசல் பகுதியில் உள்ள 58 மதகுகள் வழியாக
    உபரிநீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் உளியநல்லூர், சிறுவளையம், புன்னை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு சென்றடைகிறது. இதனால் அந்த ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
    இந்நிலையில் காவேரிபாக்கத்தை அடுத்த பொய்கைநல்லூர் பகுதியில் கால்வாய் பராமரிப்பின்றி இருந்ததால், உபரிநீர் செல்ல வழியில்லாமல் அருகே உள்ள விநாயகபுரம் பகுதியில் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும், அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம், சுகாதார நிலையம் உள்ளிட்ட கட்டடங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர்.
    எனவே, தண்ணீரை வெளியேற்ற அரசு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai