Enable Javscript for better performance
கால்வாயில் விழுந்த விவசாயி சாவு- Dinamani

சுடச்சுட

    

    பாலாற்றுப் பாசனக் கால்வாயில் தவறி விழுந்த விவசாயி இறந்தார்.
    வாலாஜாபேட்டையை அடுத்த திருமலைச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன் (70), விவசாயி.
    இவர் வழக்கம் போல் சனிக்கிழமை மாடுகளைமேய்த்துவிட்டு மாலை சாத்தம்பாக்கம் கசக் கால்வாய்க் கரை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
    அப்போது பாலாறு அணைக்கட்டிலிருந்து காவேரிபாக்கம் ஏரிக்கு செல்லும் பாசன  கால்வாயில் தவறி விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
    இது குறித்து தகவறிந்த ராணிப்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறையினர் சம்பவ இடம் சென்று சுமார் 30 நிமிடம் போராடி சுந்தரேசனின் சடலத்தை மீட்டனர்.  
    இதுகுறித்து வாலாஜா போலீஸார்   வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai