Enable Javscript for better performance
டாஸ்மாக் விற்பனையாளரைத் தாக்கி ரூ. 1.60 லட்சம் பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பாணாவரம் அருகே டாஸ்மாக் விற்பனையாளரைத் தாக்கி ரூ. 1.60 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
    காவேரிபாக்கத்தை அடுத்த பாணாவரம் அருகே மலைமேடு கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இக்கடையில் அய்யம்பேட்டை சேரி கிராமத்தைச் சேர்ந்த பழனி விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறார். இவர், தினமும் டாஸ்மாக் கடையில் மது விற்பனையான பணத்தை மறுநாள் காவேரிபாக்கத்தில் உள்ள வங்கியில் செலுத்துவது வழக்கம்.
    இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி இரவு 10 மணிக்கு வழக்கம் போல கடையை மூடிவிட்டு, மது விற்ற ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கத்தை பையில் வைத்துக் கொண்டு பைக்கில் அய்யம்பேட்டை சேரி கிராமத்தில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பென்னப்பந்தாங்கல் கிராமம் அருகே வந்தபோது, பைக்கில் பின்னால் வந்த மர்ம நபர்கள் 2 பேர், பழனியை வழி மறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளனர். பின்னர் அவரிடமிருந்த பணப் பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
    இதுகுறித்து பழனி அளித்த புகாரின் பேரில் பாணாவரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai