Enable Javscript for better performance
திருமலையில் தாய், மகன் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    திருமலையில் கடன் தொல்லை காரணமாக தாய்,  மகன் ஆகியோர் விஷமருந்தி தற்கொலை செய்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
        இதுகுறித்து திருமலை போலீஸார் கூறியதாவது: திருமலையில் ஞாயிற்றுக்கிழமை காலை பக்தர்கள் தங்கும் 2-ஆவது மண்டபம் அருகில் வயதான ஒரு பெண்ணும், இளைஞரும் இறந்து கிடந்தனர்.  இருவரின்  சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பதி ரூயா மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
    விசாரணையில் அவர்கள் சித்தூரைச் சேர்ந்த புஷ்பா(56) மற்றும் அவரது மகன் சேகர் (29) என்பது தெரிய வந்தது.
     கடந்த ஒரு மாதத்துக்கு முன் திருமலைக்கு வந்து தங்கியிருந்த தாயும், மகனும் கடன் தொல்லை காரணமாக சனிக்கிழமை இரவு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
    இது தொடர்பாக திருமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai