Enable Javscript for better performance
மழைநீரை வெளியேற்றக் கோரி சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    திருப்பத்தூர் ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திருப்பத்தூர் பகுதியில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
    இந்நிலையில், திருப்பத்தூர் புதுப்பேட்டை பிரதான சாலையில் உள்ள ரயில்வே தரைப்பாலத்தில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக மழைநீர் தேங்கியுள்ளது.
    மழைநீரை வெளியேற்றக் கோரி பொதுமக்கள் பலமுறை நகராட்சி அலுவலகத்துக்கு விடுத்த கோரிக்கையின் பேரில், கடந்த 2 நாள்களுக்கு முன் மோட்டார் மூலம் மழைநீர் அகற்றப்பட்டது. இருப்பினும் முழுமையாக அகற்றப்படாததால் அவ்வழியாக செல்ல முடியாமல் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்துக்குள்ளாகினர்.
    இந்நிலையில், மழைநீரை முழுவதுமாக அகற்றக் கோரி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த நகராட்சி ஆணையர் (பொ)அசோக்குமார், வட்டாட்சியர் ஸ்ரீராம், டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியல் கைவிட்டப்பட்டது.
    இதேபோல, நீதிமன்றத்தில் உள்ள பிரதான சாலையைச் சீரமைக்கக் கோரியும், வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற கோரியும் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை ஒருநாள் நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai