Enable Javscript for better performance
மோர்தானா அணை நீர் பங்கீட்டில் பிரச்னை: அதிகாரிகள் சமரசம்- Dinamani

சுடச்சுட

    

    மோர்தானா அணை நீர் பங்கீட்டில் பிரச்னை: அதிகாரிகள் சமரசம்

    By DIN  |   Published on : 22nd October 2017 11:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மோர்தானா அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை 2 ஏரிகளுக்கு சமமாகப் பிரித்து விடுவது தொடர்பாக இரு கிராம மக்களிடையே ஞாயிற்றுக்கிழமை பிரச்னை ஏற்பட்டது. இதில் அதிகாரிகள் தலையிட்டு சமரசம் செய்தனர்.
    குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணை தொடர் மழை காரணமாக அண்மையில்  நிரம்பியது.
    இதன் உபரி நீர் கால்வாய் வழியாக குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஏரிக்குச் செல்கிறது. நெல்லூர்பேட்டை ஏரி நிரம்பினால்தான் செட்டிகுப்பம் ஓட்டேரிக்கு தண்ணீர் செல்லும். ஆனால் ஓட்டேரிக்கு மோர்தானா கால்வாய் நீரை விட வலியுறுத்தி செட்டிகுப்பம் கிராம மக்கள் சில நாள்களுக்கு முன் ஏரியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    இந்நிலையில் மோர்தானா அணைக் கால்வாயில் இருந்து கடந்த ஒரு வாரமாக தட்டாங்குட்டை ஏரிக்கு தண்ணீர் விடப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை செட்டிகுப்பம் கிராம மக்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் நெல்லூர்பேட்டை அருகே சாலையைத் துண்டித்து, கால்வாய் அமைத்து தட்டாங்குட்டை ஏரிக்குச் செல்லும் தண்ணீரை திருப்ப முயன்றனர்.
    தகவல் அறிந்ததும் தட்டாங்குட்டை கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு சென்று செட்டிகுப்பம் கிராம மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  
    தகவல் அறிந்ததும் வட்டாட்சியர் பத்மநாபன், பொதுப்பணித் துறை அதிகாரிகள், நகர போலீஸார் அங்கு சென்று இரு கிராம மக்களையும் சமரசம் செய்தனர். மோர்தானா கால்வாயில் வரும் நீரை 2 ஏரிகளுக்கும் சமமாகப் பிரித்து எடுத்துக் கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதன்படி செய்வதாக இரு கிராம மக்களும் ஒப்புக் கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai