Enable Javscript for better performance
வரத்து குறைவால் காய்கறி விலை அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    வேலூரில் வரத்து குறைவு காரணமாக காய்கறிகள் விலை சனிக்கிழமை உயர்ந்திருந்ததால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.
    வேலூர் நேதாஜி சந்தைக்கு மாவட்டம் மட்டுமல்லாது ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.
    கடந்த இரு தினங்களுக்கு முன் கிலோ ரூ. 20-க்கு விற்கப்பட்ட தக்காளி விலை உயர்ந்து சனிக்கிழமை ரூ. 40-க்கு விற்கப்பட்டது. இதுதவிர, கத்தரிக்காய், பீன்ஸ், கேரட், அவரை உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிலோ ரூ. 15 வரை அதிகரித்திருந்தது.
    இதுகுறித்து காய்கறி மொத்த வியாபாரியிடம் கேட்டதற்கு, தொடர் மழை காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் வரத்து பாதியாக குறைந்து விட்டது. இதனால் விலை அதிகரித்துள்ளது. வரும் நாள்களில் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai