குடியாத்தம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பெண் காயமடைந்தார்.
குடியாத்தத்தை அடுத்த ராமாலையைச் சேர்ந்தவர் அன்பழகன். இவர் கேபிள் டிவி ஆபரேட்டராக உள்ளார். இவரது மனைவி லதா (41). இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்பழகன் வெளியே சென்றிருந்தாராம். அப்போது கேபிள் டிவி பழுது அடைந்துவிட்டதாக பலர் புகார் தெரிவித்தார்களாம். இதையடுத்து லதா (41) வீடு வீடாகச் சென்று கேபிள் வயரை சரிபார்த்தாராம்.
அப்போது மலர் (60) என்பவரின் வீட்டில் வயரை சரிபார்த்தபோது வீட்டின் மேற்பகுதியில் இருந்து கீழே விழுந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததாம். இதில் பலத்த காயமடைந்த லதா குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுதொடர்பாக பரதராமி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.