மனைவி கொலை: கணவர் கைது

திருப்பத்தூரில் மனைவியை கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.
Published on
Updated on
1 min read

திருப்பத்தூரில் மனைவியை கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.
 திருப்பத்தூர், கோட்டை பகுதியில் வசித்து வந்தவர் அல்தாப்(27). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த நசீமாவுக்கும் (22) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில், அல்தாப் பணிக்கு செல்லாமல் தனது மனைவியின் நகைகளை விற்று, செலவு செய்து வந்தாராம். இதனால் தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், நசீமாவின் வீட்டிலிருந்து நகைகளை வாங்கி வரும் படி, அல்தாப் தொந்தரவு அளித்ததாகவும் தெரிகிறது. 
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தம்பதிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த அல்தாப், கத்தியால் நசீமாவின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதில் நசீமா இறந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற திருப்பத்தூர் நகர போலீஸார், நசீமாவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து, தப்பியோடிய அல்தாப்பை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.