கருணாநிதியின் உடலை அண்ணா நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதி அளிக்க மறுத்த தமிழக அரசைக் கண்டித்து ராணிப்பேட்டையில் திமுகவினர் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
முத்துகடை நான்கு வழிச்சாலை சந்திப்பில் முன்னாள் நகர்மன்றத் தலைவரும், பொதுக்குழு உறுப்பினருமான கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து விரைந்து வந்த வேலூர் சரக டிஐஜி வனிதா, எஸ்.பி. பிரவேஷ்குமார் மற்றும் போலீஸார் திமுகவினரிடம் பேச்சுவாரத்தை நடத்தி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து அவர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.