ஆற்காட்டை அடுத்த தாஜ்புரா பெரியார் நகர் பகுதியில் வியாபாரிகள் சங்கத்தின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, சங்கத்தின் தலைவர் கே.எஸ்.வேலன் தலைமை வகித்தார். செயலாளர் கே. சொக்கலிங்கம், பொருளாளர் கே.ரகோத்தமன், துணைத் தலைவர்கள் கே.தனசேகரன், கே.குலசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கெளரவத் தலைவர் கு.சரவணன் வரவேற்றார். வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சங்கக் கொடியை ஏற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினார். இதில், பட்டிமன்றப் பேச்சாளர் திருவண்ணமலை
ம.எழிலரசி, மாவட்ட வணிகர் சங்கத் தலைவர் சி.கிருஷ்ணன், ஆற்காடு அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெ. திருநாவுக்கரசு, உதவும் உள்ளங்கள் அமைப்பின் செயலாளர் சந்திரசேகரன், நிர்வாகிகள் தணிகேசன், எம்.ரேணுகோபால், அமைப்பாளர்கள் பாண்டு, அறிவுச்சுடர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.