திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றி வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் புதன்கிழமை காலை சுதந்திர தினத்தையொட்டி, தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
இந்நிலையில், தேசியக் கொடி தலைகீழாக ஏற்றி வைக்கப்பட்டு பறந்துக் கொண்டிருப்பதைப் பார்த்த பொதுமக்களில் சிலர், அதை செல்லிடப்பேசியில் படம் பிடித்து, தங்களது கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்), முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர்.
இதையறிந்த போலீஸார், தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடியை சரியாக ஏற்றி வைத்தனர்.
இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.