2,204 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்:அமைச்சர் நிலோபர் கபீல் வழங்கினார்

வாணியம்பாடி இஸ்லாமியா ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் இந்து மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 2,204 மாணவ, மாணவிகளுக்கு


வாணியம்பாடி இஸ்லாமியா ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் இந்து மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 2,204 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல் சனிக்கிழமை வழங்கினார்.
வாணியம்பாடி இஸ்லாமியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளைச் சேர்ந்த 833 மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் நிலோபர் கபீல் வழங்கினார். தொடர்ந்து, வாணியம்பாடி இஸ்லாமியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 612 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
நிகழ்ச்சிகளில், முன்னாள் எம்எல்ஏ சம்பத்குமார், நகர அதிமுக செயலர் சதாசிவம், வாணியம்பாடி முஸ்லிம் கல்வி சங்கத் தலைவர் முகமதுமூபின், இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப் பள்ளிச் செயலர் நானவரம்நிசார், பெண்கள் மேல்நிலைப் பள்ளிச் செயலர் ஜமீல்அகமது, தலைமையாசிரியர்கள் அப்துல்ஹாதி (ஆண்கள்), சர்மிளா (பெண்கள்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, இந்து மேல்நிலைப் பள்ளியில் அப்பள்ளியைச் சேர்ந்த 759 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் வழங்கினார்.
பள்ளியின் தலைவர் ராஜேந்திரன், துணைத் தலைவர் ஜனார்த்தனன், வழக்குரைஞர் வரதராஜன், செயலர் குமரேசன், தலைமையாசிரியர் கருணாகரன், பள்ளி நிர்வாகிகள் ஞானேஸ்வரன், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com