பகுதிநேர புதிய ரேஷன் கடை கட்ட ரூ. 9 லட்சம் ஒதுக்கீடு: அமைச்சர் கே.சி.வீரமணி உறுதி

நாட்டறம்பள்ளி அருகே பகுதி நேர ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்ட ரூ. 9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வதாக மாநில வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்


நாட்டறம்பள்ளி அருகே பகுதி நேர ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்ட ரூ. 9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வதாக மாநில வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி உறுதியளித்தார்.
நாட்டறம்பள்ளியை அடுத்த வெலகல்நத்தம் பகுதியில் ரேஷன் கடை உள்ளது. இங்கு வீராகவுண்டனூர், முகமதாபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சுமார் 2 கி.மீ. தூரம் சென்று ரேஷன் பொருள்களை வாங்கி வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் முகமதாபுரம் பகுதியில் பகுதிநேர ரேஷன் கடை வேண்டும் என தொகுதி எம்எல்ஏவும் அமைச்சருமான கே.சி.வீரமணியிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து வெலகல்நத்தம் கடையில் உள்ள 1, 374 குடும்ப அட்டைகளில் இருந்து 235 குடும்ப அட்டைதாரர்களுக்காக முகமதாபுரம் கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க அமைச்சர் வீரமணி நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து முகமதாபுரத்தில் வடகை கட்டடத்தில் அமைக்கப்பட்ட புதிய பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் ஊராட்சித் தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். அமைச்சர் கே.சி.வீரமணி பகுதிநேர ரேஷன் கடையை திறந்து வைத்தார். அப்போது, பகுதி நேர ரேஷன் கடைக்கு சொந்தமாக புதிய கட்டடம் கட்ட எம்எல்ஏ தொகுதி நிதியிலிருந்து ரூ. 9 லட்சம் ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்தார்.
தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கி, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
விழாவில் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் பிரேம்குமார், ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர் மாருதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேம்குமார், கனகராஜி, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் ரமேஷ், முன்னாள் எம்எல்ஏ ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com