Enable Javscript for better performance
அரக்கோணத்தை புறநகராக அறிவிக்க ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    அரக்கோணத்தை புறநகராக அறிவிக்க ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை

    By DIN  |   Published on : 09th February 2018 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரக்கோணம் ரயில் நிலையத்தை விரைவில் புறநகர எல்லைக்குள் கொண்டு வர வேண்டும் என அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    இதுகுறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு சங்கத்தின் தலைவர் நைனா மாசிலாமணி அனுப்பியுள்ள கடிதம்:
    தற்போது சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டு அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய இரு வட்டங்கள் அதற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கான அரசு ஆணையை தமிழக அரசும் வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு வெளிவந்த பிறகும் தெற்கு ரயில்வே நிர்வாகம் அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய இரு ரயில் நிலையங்களையும் புறநகர எல்லைக்குள் கொண்டு வராமல் உள்ளது.
    இதனால் அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு செல்ல பயணச் சீட்டு வாங்கும் போது, திரும்ப வருவதற்கான பயணச் சீட்டு பெற இயலவில்லை. தெற்கு ரயில்வே உத்தரவின்படி புறநகர் ரயில் நிலையங்களில் மட்டும் இந்த பயணச் சீட்டு தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
    சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் திருவள்ளூர் வரையிலும், கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் பொன்னேரி வரையிலும் திரும்ப வருவதற்கான பயணச் சீட்டு வழங்கப்படுகிறது.
    எனவே தெற்கு ரயில்வே நிர்வாகம் புறநகர் எல்லையை மாற்றி அமைத்து அரக்கோணம் ரயில் நிலையத்தில் திரும்ப வருவதற்கான பயணச் சீட்டை வழங்கும் நடவடிக்கையை தொடங்க வேண்டும் என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai