Enable Javscript for better performance
எல்ஐசி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ராணிப்பேட்டை எல்ஐசி கிளை அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழல் ஏற்படுத்தாத கிளை நிர்வாகத்தைக் கண்டித்து எல்ஐசி ஊழியர்கள் சங்கத்தினர் கிளை அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆர்ப்பாட்டத்துக்கு, சங்க நிர்வாகி சுப்பிரமணி தலைமை வகித்தார். சங்கத்தின் கோட்டத் தலைவர் பழனிராஜன், துணைத் தலைவர் நாராயணன், துணைச் செயளாலர், குணாளன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். நிர்வாகி பரத் நன்றி கூறினார்.
    இதில், அலுவலக ஊழியர்கள் பணியில் இருக்கும் போது இருக்கை காலியாக உள்ளது போல் சிலர் புகைப்படம் எடுப்பதும், ஊழியர்களைப் பற்றி அவதூறாக மர்மக் கடிதங்கள் எழுதுவதும் போன்ற செயல்களில் சிலர் ஈடுபடுவதால் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு அற்ற சூழல்
    உருவாகியுள்ளது.
    இதுபோன்ற செயல்களைத் தடுத்து கிளை ஊழியர்களுக்குப் பாதுகாப்பான பணிச்சூழல் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai