Enable Javscript for better performance
காட்பாடியில் சுற்றுலா வழிகாட்டி பணிக்கு இலவச பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    காட்பாடியில் சுற்றுலா வழிகாட்டி பணிக்கு இலவச பயிற்சி

    By DIN  |   Published on : 09th February 2018 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்ற இலவச பயிற்சி வகுப்பு காட்பாடியில் 10 நாள்கள் நடைபெறுகிறது. இதுகுறித்து ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் பயணம், சுற்றுலா வழிகாட்டி குறித்த இலவச பயிற்சி வகுப்பு காட்பாடி, காந்தி நகரில் உள்ள இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் 10 நாள்கள் நடத்தப்பட உள்ளது.
    இந்த பயிற்சியைப் பெற குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவும், 18 முதல் 45 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். பயிற்சி காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெறும். சுற்றுலா வழிகாட்டியாக விரும்புவோர் வேலூர், காட்பாடி, காந்தி நகர், முதல் கிழக்கு நெடுஞ்சாலையில் உள்ள இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai