Enable Javscript for better performance
தலைமை ஆசிரியருக்கு கத்திக்குத்து: ஆசிரியர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணி- Dinamani

சுடச்சுட

    

    தலைமை ஆசிரியருக்கு கத்திக்குத்து: ஆசிரியர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணி

    By DIN  |   Published on : 09th February 2018 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தலைமை ஆசிரியரை பிளஸ் 1 மாணவன் கத்தியால் குத்திய விவகாரம் தொடர்பாக வேலூர் மாவட்டம் முழுவதும் அரசு, உதவிபெறும், தனியார் பள்ளி ஆசிரியர்கள் கருப்புப் பட்டை அணிந்து வியாழக்கிழமை பணியில் ஈடுபட்டனர்.
    திருப்பத்தூர் வட்டம், புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாபுவை பிளஸ் 1 மாணவர் கத்தியால் குத்தினார். இச்சம்பவத்தை அடுத்து பள்ளிகளில் ஆசிரியர், மாணவர்களிடையே நல்லுறவை வலுப்படுத்திடவும், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்களை மன அழுத்தத்துக்கு உள்ளாக்கும் போக்கை கைவிடவும், மருத்துவர்களுக்கு உள்ளதுபோல் ஆசிரியர்களுக்கும் பணிப் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு அளித்திடவும் அரசை வலியுறுத்தி வேலூர் மாவட்டம் முழுவதும் ஆசிரியர்கள் வியாழக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபடுவதென தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இணைந்த கூட்டமைப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டம் முழுவதும் அரசு, உதவிபெறும், தனியார் பள்ளி ஆசிரியர்கள் வியாழக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai