Enable Javscript for better performance
திருவள்ளுவர் பல்கலை., முறைகேடுகளை கண்டித்து உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளுவர் பல்கலை., முறைகேடுகளை கண்டித்து உண்ணாவிரதம்

    By DIN  |   Published on : 09th February 2018 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளுவர் பல்கலைக்கழக நிர்வாக முறைகேடுகளைக் கண்டித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர், நுழைவு வாயில் முன் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சேர்க்காட்டில் அமைந்துள்ள வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளிடக்கிய பகுதிகளில் 128 கல்லூரிகளும், 6 உறுப்புக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் சுமார் 1.80 லட்சம் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.முருகன், பதிவாளர் (பொறுப்பு) வெ.பெருவழுதி, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பா.செந்தில்குமார் உள்ளிட்டோர் பல்கலைக்கழக நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறி பல்கலைக்கழக ஆசிரியர் சங்க 3-ஆம் மண்டலத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இதில் பல்கலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai